என்.டி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த ஜூனியர் என்.டி.ஆர் !

ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார். அவரது தோற்றங்களை ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார். தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்தில் ஜெயலலிதாவுடன் நடித்துள்ள பிரபல நடிகர்களின் கதாபாத்திரங்களும் இடம்பெற உள்ளன. அந்த வகையில் தெலுங்கு நடிகரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆர். கதாபாத்திரத்தில் அவரது பேரன் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க வைக்க படக்குழு முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் என்.டி.ஆர். போல் யாராலும் நடிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.