Cine Bits
என் தந்தையைப்போல் என்னால் நடிக்க முடியாது – கவுதம் கார்த்திக் !
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் – மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள 'தேவராட்டம்' திரைப்படம் மே 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகிறது. படம் பற்றி நடிகர் கவுதம் கார்த்திக் கூறுகையில் செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை கார்த்திக் மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன். எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேனென்று அவர் கூறினார்.