என் மகளை அச்சுறுத்தும் கருத்துக்களை எப்படி எதிர் கொள்வது !

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப். இவருடைய முதல் படம் வெளிவரவில்லை என்றாலும் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு வெற்றி முகமாகவே இருந்தது. அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மோடி அவர்களுக்கு, உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள். அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி என்று நீங்கள் பேசியிருப்பதற்கு நன்றி. அதே நேரம், நான் உங்கள் எதிர்ப்பாளராக இருப்பதால், என் மகளை மிரட்டும் உங்கள் ஆதரவாளர்களை எப்படி அணுகுவது என்று எங்களுக்கு சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.