என் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை நடிகை விசித்ரா விளக்கம் !

முன்னாள் கதாநாயகிகள் பலர் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் விசித்ராவும் நடிக்க வருகிறார். மீண்டும் நடிப்பது குறித்து விசித்ரா கூறும்போது, நான் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 18 வருடங்களுக்கு முன்னால் நடிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருகின்றன. எனக்கும் நடிக்க அழைப்பு வருகிறது. வலுவான குணசித்திர வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். இதற்காக கதைகள் கேட்டு வருகிறேன் என்றார். அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி கதையம்சத்தில் வெளியான படங்கள் என்னை நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்யவிடாமல் தடுத்துவிட்டன, வேறு யாரும் தடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.