என் வாழ்க்கையின் இணையற்ற இரண்டு ரத்தினங்கள் – சுஜாவருணி !

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து ஒருசில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தைக்கு ஆத்வைத் என பெயர் சூட்டினர். இந்நிலையில் இன்று தனது முதலாவது திருமண நாளை தனது அழகிய குழந்தையுடன் கொண்டாடினார் சுஜா வாருணி, இன்று எனது முதல் திருமண நாள் என்று சொல்வதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அதற்கும் மேலே ஆத்வைத்துடன் கொண்டாடுவது மற்றொரு எல்லையற்ற மகிழ்ச்சி. என் வாழ்க்கையில் இந்த இரண்டு விலைமதிப்பற்ற ரத்தினங்களை எனக்கு கடவுள் கொடுத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.