எமி ஜாக்சன் தனக்கு ஆண் குழந்தை பிறக்கப்போவதாக அறிவிப்பு

லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. மீண்டும் லண்டன் பறந்த அவர் அங்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எமி கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். தற்போது எமி தனக்கு பிறக்கப் போகும் குழந்தை குறித்து டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனக்கு ஆண் குழந்தை பிறக்க போகிறது என்று எமி ஜாக்சன் மகிழ்ச்சியாக தெரிவிக்கிறார்.