எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன் – செல்வராகவன் !

செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போது என்று ரசிகர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர். புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் தனுஷ் 2-ம் பாகம் எடுத்து சொதப்பி விடக்கூடாது என்று தயங்கியதால் முயற்சி கைவிடப்பட்டது. கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளேன். இதற்கான கதை தயாராகிவிட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்த படத்தில் பதிவு செய்யப்படும். அரசியல் தலைவர்களில் எனக்கு எம்.ஜி.ஆரை பிடிக்கும். அவரது வாழ்க்கையை படமாக்க வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்.” என்றார்.