Cine Bits
எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் இல்லை – கஸ்தூரி விளக்கம் !
நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது கருத்துகள் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் என்னய்யா இது, பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க. என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சித்து பதிவு செய்திருந்தார். இதற்கு நடிகை லதா தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் தவறொன்றுமில்லையே இருப்பினும் இதில் யார் மனமும் புண்ப்பட்டிருந்தால், என் மனதார வருந்துகிறேன்.