எலந்தப்பழம் பாடல் புகழ் நடிகை விஜய நிர்மலா காலமானார் !

எலந்தப்பழம் பாடல் புகழ் மற்றும் அதிக படங்களை இயக்கிய சாதனை பெண் இயக்குனருமான நடிகை விஜய நிர்மலா நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்ற பெருமையைப் பெற்று, கடந்த 2002ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். இவரும், தெலுங்கு நடிகையான சாவித்திரியும்  மட்டுமே புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசனை இயக்கிய பெருமைக்குரியவர்கள் ஆவர். இவர்  ‘மச்ச ரேகை’ எனும் தமிழ் படத்தில் குழந்தை கதாப்பாத்திரமாக அறிமுகமாகி, எங்க வீட்டு பெண், பணமா பாசமா, என் அண்னன், ஞான ஒளி போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், நடிகர் மகேஷ் பாபுவின் தாயாருமாவார். 73 வயதாகும் இவரின் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.