எல்லா சாதியையும் சமமாக பார்க்கும் மகாகவி கரோனா – அருண்ராஜா காமராஜ் !

குணச்சித்திர நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர் என்று பன்முகங்களைக் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதற்கு முன்னதாக ‘ராஜாராணி’, ‘மான் கராத்தே’, ‘மரகத நாணயம்’, ‘யானும் தீயவன்’ ஆகிய படங்களில் நடித்தார். ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் 3 நாயகர்களில் ஒருவராக நடித்தார். 25க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். ‘கபாலி’ படத்தில் நெருப்புடா பாடலையும், ‘கொடி’ படத்தில் கொடி பறக்குதா பாடலையும் எழுதியவர் அருண்ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் எழுதி வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் மிகவும் பிரபலம். தற்போது கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அருண்ராஜா காமராஜ் ட்விட்டரில் கரோனா வைரஸ் நோய் அறிகுறிகள், நோய் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒரு விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை அருண்ராஜா காமராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன், ”சாதிகள் இல்லையடி பாப்பா. எல்லா சாதியையும் சமமாக பார்க்கும் மகாகவி கரோனா” என்று தெரிவித்துள்ளார்.