எல்லோரையும் போல நானும் தவறுகள் செய்து இருக்கிறேன் – சமந்தா !

சமந்தா நடித்து தமிழில் சூப்பர் டீலக்ஸ் படமும், தெலுங்கில் மஜிலி படமும் வெளியாகி வரவேற்பை பெற்றன. அடுத்து தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார். எல்லோரையும் போல நானும் தவறுகள் செய்து இருக்கிறேன். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொண்டேன். ஒவ்வொரு தவறில் இருந்தும் சில பாடங்களை கற்றுக்கொண்டேன். என்னை விட அதிகம் உழைப்பவர்களும், திறமையானவர்களும் சினிமா துறையில் இருக்கிறார்கள். ஆனால் கதாநாயகியாக எனது பயணம் வெற்றியடைந்ததற்கு காரணம் கதைகள் தேர்வுதான். கதைகளைத்தான் நான் நம்புகிறேன். கதை தேர்வில் நான் செய்த சில தவறுகளையும், அதனால் ஏற்பட்ட அனுபவங்களையும் மறக்கவே இல்லை. அவற்றில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன். மற்றவர்களையும் கவனித்து அவர்களிடம் இருந்தும் நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன் இவ்வாறு சமந்தா கூறினார்.