எஸ்.எஸ். ராஜமௌலி படத்தில் பங்கேற்கும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் !

எ வியூ டு கில்,  பிரதர், டிவிஷன் 19, டெம்டேஷன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் அலிசன் டூடி. அதேபோல் அவுட் போஸ்ட், டைவர்ஜென்ட், பிக் கேம், கோல்ட் ஸ்கின், ஆக்ஸிடன் மேன் உள்ளிட்ட பல்வேறு ஆங்கில படங்களில் நடித்திருப்பவர் ரே ஸ்டீவென்சன். இவர்கள் இருவரும் தற்போது ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் நடிக்க உள்ளார். ஹாலிவுட் நடிகர்கள் பற்றி தெரிவித்திருக்கும் ராஜமவுலி,’வில்லன் வேடத்தில் நடிக்கவிருக்கும் ரே ஸ்டீவன்சன்னுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். படப்பிடிப்பை விரைவில் தொடங்க காத்திருக்கிறேன். அதேபோல் அலிசனை இந்திய சினிமாவுக்கு வரவேற்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பு மிகவும் அற்புதமாக அமைந்தது. நீங்கள் பிரதான வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதில் சந்தோஷம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.