எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யை வைத்து ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க முதிவு செய்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் ஆவர். இந்நிலையில் பொதுநல விசயங்களுக்காக போராடும் டிராபிக் ராமிசாமியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். இதற்காக டிராபிக் ராமசாமியை நேரில் சந்தித்து பல விசயங்களை கேட்டு ஸ்க்ரிப்ட் தயாரித்துள்ளாராம். இதில் தன் மகன் விஜய்யை இளவயது ராமசாமியாக நடிக்க வைப்பதோடு, தானும் வயதான ராமசாமியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம். இதோடு தன் சினிமா பயணத்திற்கு எண்ட் கார்ட் போட அவர் நினைத்துள்ளதால், இப்படத்தின் மூலம் முக்கிய பாடத்தை சமுதாயத்திற்கு கற்றுக்கொடுப்பேன் என்று  கூறியுள்ளார்.