எஸ்.நந்தகோபால் தயாரிக்க விஜய்சேதுபதி – திரிஷா நடிக்கும் “96” படத்தின் பூஜை ஆரம்பம்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட், விஷால் நடித்த கத்திசண்டை போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்குநராக களமிறங்கியுள்ள படம் 96. முதன்முறையாக விஜய்சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கின்றனர். 1990 காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படம் முற்றிலும் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஜனரஞ்சகமான படமாக 96 உருவாக உள்ளது.