எஸ்.பி.பிக்கு அமெரிக்காவில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருந்த எஸ்பிபி அவர்களின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பணம் ஆகியவை மர்ம நபர்களால் திருடு போனதாக  திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

எஸ்பிபி இவை அனைத்தையும் ஒரு பையில் வைத்திருந்ததாகவும், அந்த பையில் பாடல் குறிப்புகள் அடங்கிய ஐபேடும் இருந்தது குறிப்பிடத்தக்கது.தனது பாஸ்போர்ட் திருடு போனது குறித்து எஸ்பிபி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்துள்ளார்.அதை அடுத்து அவர் நாடு திரும்ப வசதியாக மாற்று பாஸ்போர்ட் ஒன்றை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.