ஏன் ஜெயலலிதா படத்தில் நடிக்கவில்லை? – வித்யா பாலன் விளக்கம்!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் வித்யா பாலன், தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் தலைவி என்ற படத்தில் நடிப்பதற்கு வித்யா பாலனுக்கு வாய்ப்பு வந்தது ஆனால், இந்தப் படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் படத்தில், அவர் நடிப்பதற்கு சம்பளமாக ரூ.24 கோடி பேசப்பட்டதாக தெரிகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மறுப்பதற்கான காரணம் குறித்து வித்யா பாலன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிரபல அரசியல் தலைவர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தேன்.