ஏராளமான பொருட்செலவில் ரிலீஸ் ஆகும் சந்தனம், யோகி பாபு நடித்த டகால்டி !

சந்தானத்துடன் யோகி பாபு இணைந்து நடிக்கும் முதல் படம், சங்கர் உதவியாளர் விஜய் ஆனந்த் இயக்கும் முதல் படம், பாடகர் விஜய நாராயணன் இசையமைக்கும் முதல் படம், எஸ்.பி.செளத்ரி தயாரிக்கும் முதல் படம் என பல ‘முதல்’களுடன் திரை காண்கிறது ‘டகால்டி’. எனது முதல் படத்துக்கான கதை, திரைக்கதை, வசனங்களை நானே எழுதியுள்ளேன். சந்தானம், யோகி பாபு ஆகிய இருவரில் யார் பெரிய டகால்டி என்பதுதான் கதை. வங்காள திரையுலகைச் சேர்ந்த ரித்திகா நாயகியாக நடிக்க, தெலுங்குப் படவுலகைச் சேர்ந்த பிரம்மானந்தம், இந்தி நடிகர் தருண் அரோரா, ரேகா, மனோபாலா என நான்கு மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களிலும் ஏராளமான பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி என்கிறார் விஜய் ஆனந்த்.