ஏழு ஆண்டுகள் கழித்து ஹிந்தியில் ரீமேக்காகும் லிங்குசாமியின் வேட்டை !

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் வேட்டை. ரிலீசாகி சுமார் 7 ஆண்டுகள் ஆகிய நிலையில், இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. ஆர்யா கதாபாத்திரத்தில் டைகர் ஷெரிப்பும், மாதவன் கதாபாத்திரத்தில் ரிதேஷ் தேஸ்முக்கும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சாஹோ படத்தில் நடித்த ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஏற்கனவே வெளியான பாஹி 1 மற்றும் 2-ம் பாகம், வர்சம், ஷனம் ஆகிய தெலுங்கு படங்களின் ரீமேக்காகும். இந்நிலையில் வேட்டை படத்தின் ரீமேக்காக பாஹி 3-ம் பாகம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.