Cine Bits
ஏழு தோட்டாக்கள் நாயகன் வெற்றியின் அடுத்த குறி !

த்ரில்லர் படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் எந்த ஒரு தடையும் இன்றி கவர்ந்திருக்கிறது. அத்தகைய திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. குறிப்பாக, பார்வையாளர்கள் தங்களை படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில நேரங்களில் சீட்டின் நுனிக்கு வர வைக்கும் படங்களையும் எதிர்பார்க்கிறார்கள். ஏழு தோட்டாக்கள் படத்தின் அறிமுகம் ஆகியவர் வெற்றி. இவர் அடுத்ததாக நடித்திருக்கும் திரில்லர் படம் ஜீவி. மிக கவனமாக் தன் சினிமா வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் வெற்றியின் அடுத்த பயணம் தான் ஜீவி படம். மிகச்சிறந்த குழுவின் உழைப்பால், மொத்த படமும் குறித்த நேரத்தில் முடிவடைந்திருக்கிறது. தற்போது, படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள், படத்துக்கு 'U' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.