ஏழை எளிய மக்களுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்த மாஸான செயல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகம் முழுக்க ரசிகர்களை பெற்றுள்ளார். அவரின் படங்களுக்கு உலகளவில் நல்ல மார்க்கெட் உள்ளது. அவரின் நடிப்பில் தர்பார் படம் அடுத்ததாக வெளியாகவுள்ளது. இம்மாத தொடக்கத்தில் பொங்கல் ஸ்பெஷலாக வந்த பேட்ட படம் செம ஹிட்டானது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அரசியலுக்கான ஆயத்தப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோடைகாலத்தில் மக்களின் தண்ணீர் பஞ்சத்திற்காக வட சென்னை பகுதியில் டேங்கர் லாரிகளில் தினமும் 2 லட்சம் லிட்டர் இலவச குடிநீரை ரஜினி மக்கள் இயக்கம் வழங்கி வருகிறார்களாம்.