ஏழை குழந்தைகளின் நலன் கருதி – நடிகை கவுதமியின் முயற்சி!

நடிகை கவுதமி திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை அமைத்து ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்பிக்கும் முயற்சியை தொடங்க உள்ளார். ’லைப் அகைன் இந்தியா' நிறுவனத்தின் நிறுவனர் நடிகை கௌதமி அவர்கள் சமீபத்தில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளிகளில் ஏழை குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளார். மற்றவர்களுக்கு உதவி செய்து வரும் அவர், திருவண்ணாமலையில் உள்ள பள்ளி கல்வியாளர்களிடம் நீண்ட நேரம் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால கல்வி பற்றி கலந்துரையாடி உள்ளார். மேலும் அவர் திருவண்ணாமலையில் கல்வி மையம் ஒன்றை நிறுவி ஏழை குழந்தைகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களை ஆசிரியர்களை கொண்டு கற்பிக்க உள்ளார். மேலும் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் வருங்கால கல்விக்காக உதவி செய்ய அவர் காத்திருக்கிறார்.