ஏ.ஆர்.ரஹ்மானின் தண்ணீர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பாடல் !

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதோடு அவ்வப்போது சமூக விழிப்புணர்வுக்கான தனி பாடலையும் இசை அமைக்கிறார். எழும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, உலக அமைதி குறித்த பாடல்களை வெளியீட்டுள்ளார். இந்த வரிசையில் அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் தண்ணீர் பாதுகாப்பு குறித்த பாடலை வெளியிட இருக்கிறார். அடுத்து உலகம் சந்திக்கும் பிரச்சனை தண்ணீர் பிரச்சனை தான். இன்னொரு உலகப் போர் நடந்தால் அது தண்ணீர் பிரச்னைக்காகத்தான் இருக்கும், அதன் எச்சரிக்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பாடலை உருவாக்கியுள்ளார்.