ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்திகேயன் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அவர் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்ததாக இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.