Cine Bits
ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் ரஜினிகாந்த் பற்றிய தகவல்கள்

அரசியல், நிர்வாகம், கலை, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில்
இடம்பெறும். அந்த வகையில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பிறகு ரஜினிகாந்த் பற்றிய குறிப்பும் பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ரஜினிகாந்தின் புகைப்படமும் அவர் குறித்த செய்திகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன. வாழ்க்கையில் ஏழ்மையான நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் பெரும் பணக்காரர்களாகவும் புகழ் மிக்கவர்களாகவும் உயர்ந்தவர்கள் பற்றிய ‘ரேக்ஸ் டூ ரிச்சஸ் ஸ்டோரீஸ்’ என்ற பாடத்தில் ‘பேருந்து நடத்துனராக இருந்து பின் திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராக மட்டுமல்லாமல் ஒரு கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.