ஐஸ்வர்யாராயை இழிவுபடுத்தி ‘மீம்ஸ்’ நடிகர் விவேக் ஓபராய் பகிரங்க மன்னிப்பு

அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விவேக் ஓபராய். இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விவேக் ஓபராய். இந்தியில் முன்னணி நடிகராக இருக்கிறார். இந்த மீம்சை விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. விவேக் ஓபராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர், நடிகைகள் பலர் கண்டித்தனர். எதிர்ப்பு தீவிரமானதை தொடர்ந்து விவேக் ஓபராய் நேற்று மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு விஷயம் முதலில் வேடிக்கையாக தெரியும். ஆனால் மற்றவர்களுக்கு அப்படி தெரியாது. 10 வருடங்களாக சமூகத்தில் பின்தங்கிய 2,000 குழந்தைகளுக்கு உதவிகள் செய்துள்ளேன். எந்த பெண்ணையும் எப்போதுமே நான் இழிவாக நினைத்தது இல்லை. நான் பதிவிட்ட மீம்ஸ் காரணமாக ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அந்த பதிவை நீக்கிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.