ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்தான குறும்படத்தில் கஜோலுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் !

வெகுஜன ரசிகர்களின் கவனம் சினிமாக்களைத் தாண்டி குறும்படம், வெப் சீரீஸ் பக்கமும் திரும்பி வருகிறது. இணைய உலகம் அதற்கான வாசல்களையும் உருவாக்கிவருகிறது. முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், புதியவர்கள் என அனைவருக்குமான களமாக மாறிவரும் இதன் சமீபத்திய வரவு, கஜோலும் ஸ்ருதி ஹாசனும். இருவரும் இணைந்து 'தேவி' எனப் பெயரிடப்பட்டுள்ள குறும்படத்தில் நடிக்க உள்ளனர். அறிமுக இயக்குநர் பிரியங்கா பானர்ஜி இந்தக் குறும்படம் குறித்து, வெவ்வேறு அடுக்குகளில் உள்ள ஒடுக்கப்பட்ட பெண்கள் குறித்தான கதை இது. ஓர் அறையில் இவர்கள் அனைவரும் வசிக்க நேர்கையில், அவர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் கதைதான் இந்த 'தேவி'” என்று தெரிவித்துள்ளார். பாலினப் பாகுபாடு, அதிகார துஷ்பிரயோகம், வன்முறை இதெல்லாம் அதிகமா இருக்கிற இந்தக் காலகட்டத்துல 'தேவி' மாதிரியான கதையம்சம் இருக்கக்கூடிய படங்கள் வெளிவருவது ரொம்பவே முக்கியமான விஷயம். இதுல நானும் ஒரு பங்கா இருக்கேன்கிறதுல ரொம்ப சந்தோஷம்” என்று தெரிவித்துள்ளார் கஜோல்.