ஒன்பது படங்கள் பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தமிழ்  திரைப்படங்களின் வெளியீடு  டிசம்பர் 29 ம் தேதிக்குள்  முடிவடைய உள்ளது. புத்தாண்டில் ஆரம்பமாக உள்ள 2018  ஆண்டில் ஜனவரி 5 தேதி, முதல் வெள்ளிக் கிழமையில், தற்போது வரை “விதி மதி  உல்டா” படம் மட்டுமே வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  விசேஷ நாட்களில் ஐந்துக்கும் குறைவான படங்களை  கடந்த சில வருடங்களாக  வெளியிடுவது  வழக்கமாக இருந்தது. ஆனால் வரும் பொங்கலுக்கு 9  படங்கள் வெளியிட உள்ளதாக தெரிகிறது. இது  தவிர  “இரும்புத்  திரை ” டிக் டிக் டிக் ” ஆகிய படங்கள் வெளிவருவதாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் எந்த படம் பொங்கலுக்கு வெளியீடு,  இது ஜனவரியில் வெளியீடா  அல்லது பிப்ரவரி வெளியீடா   என்பது கடைசி நேரத்தில் தான்  தெரியவரும்.