ஒரு கலைஞனுக்கு சமூக அக்கறை வேண்டும் – இசை வெளியீட்டுவிழாவில் அமீர் பேச்சு !

ராஜி நிலா முகில் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாயநதி’. இந்தப் படத்தில் நடிகர் அபி சரவணன் அப்புகுட்டி மற்றும் நாயகி வெண்பா ஆகியோர் நடித்து உள்ளனர்.  இளையராஜாவின் மகள் ராஜா பவதாரணி இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இயக்குநர் அமீர் மற்றும் யுவன் சங்கர் ராஜா இசைத் தட்டை வெளியிட்டனர். இந்தப் படத்தில் நடிகர் அபி சரவணன் அப்புகுட்டி மற்றும் நாயகி வெண்பா ஆகியோர் நடித்து உள்ளனர். தொடர்ந்து பேசிய அமீர் சினிமாவில் எல்லா சங்கங்களும் மூடு விழா நடத்தக்கூடிய நிலையில் தான் உள்ளன. ஒரு கலைஞனுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும். ஆனால் அதற்காக ஃபேஸ்புக், டிவிட்டரில் நாம் ஒரு கருத்தைச் சொல்லி அதற்காக வரும் கேள்விகளுக்கு எதிர்வினையாற்றிக் கொண்டே இருந்தால் முன்னேற முடியாது.  தற்போது உள்ள முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்தார் நீண்ட நாளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தமிழக அரசு விருதுகளை வழங்க வேண்டும் என கூறினார்.