ஒரு படத்தை எடுத்து அதை ரிலீஸ் பண்றத்துக்கு இத்தனை தொல்லைகளை கதறும் ஹீரோ

ரெட் சில்லி ப்ளாக் பெப்பர் சினிமாஸ் சார்பாக நேதாஜி பிரபு தயாரிப்பில் ரமணியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஒளடதம்'. நான்கு மாதங்களுக்கு முன்னரே சென்சார் செய்யப்பட்டு வெளியிடத் தயாராகப் பத்திரிகைகளில் முறைப்படி தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சில மோசடிக்காரர்களின் சதியால், பட ரிலீசுக்கு உயர் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் புதிதாக படம் எடுக்க வருபவர்களை ஏமாற்றும் கும்பலிடம் சிக்கிக் கொண்டது ஔடதம். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நேதாஜி பிரபு, “சினிமா மீது இருந்த காதலால், நான் பார்த்துக்கொண்டிருந்த பெரிய வேலையை விட்டுவிட்டு, சொந்த பணத்தில் படம் எடுத்தேன். அதுவும் முதல் படத்தை ஒரு மெடிக்கல் திரில்லர் படமாக எடுத்திருக்கிறேன். எங்களை போன்ற புதிய தயாரிப்பாளர்களை வழிநடத்த தமிழ் சினிமாவில் ஆட்கள் இல்லை. மாறாக எங்களை ஏமாற்றி பணம் பறிக்கத்தான் பார்க்கிறார்கள். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு படம் எடுத்தால், அதை ரிலீஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ஆளவிட்டா போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.