ஒரே இரவில் 1.86 கோடியை இழந்த தொழிலதிபர் – சில எச்சரிக்கை குறிப்புகள்

சமீபத்தில் மும்பையில் தொழிலதிபர் தொழிலதிபர் ஒருவர் தொகுப்பி;தகவல் அட்டை (sim card) மாற்றும் மோசடியில் தனது 1.86 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இத்தொழிலதிபரின் கணக்கில் இருந்து 28 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது.
இவையனைத்தும் ஒரே இரவில் நடந்துமுடிந்துள்ளது.இது போன்ற சமயங்களில், ஏமாற்றுக்குழு யாராவது ஒருவரின் கைபேசி தொகுப்பி;தகவல் அட்டையை முடக்குவதற்கு கோரிக்கை விடுக்கிறார்கள். தொகுப்பி;தகவல் அட்டை முடக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரின் எண்னை கொண்டிருக்கும் புதிய தொகுப்பி;தகவல் அட்டை மூலம் தொடர்க்கற்றல் (OTP) எனச் சொல்லப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுக்குறியீட்டைப்பயன்படுத்தும் நூதன திருட்டில் ஈடுபட்டு பணத்தை ஒருவரின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றுவது போன்ற நிதி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.இன்றைய நாட்களில், பெரும்பாலான நிதி பரிமாற்றங்கள் நிகழ்நிலை(online) அல்லது இலக்கமுறை (digital) வழியாகவேச் செய்யப்படுகின்றன. இதனால் பெரும்பாலான தகவல்கள் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனும் சூழ்நிலையும் நிலவுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் தொகுப்பி;தகவல் அட்டையை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் அவர்களிடமிருந்து உங்களுக்கு நீங்கள் முன்பின் அறியாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடும். மேலும் அவர்கள் உங்களிடம் பல்வேறு தகவல் கேட்பார்கள். அப்போது நீங்கள் அளிக்கும் முக்கியமான தகவல்களை பகிர்வதன் மூலம் தங்களின் மோசடிக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.இப்படித்தான் உங்களது தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படுகின்றன.இதை தவிர்க்க 'ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் மின்னஞ்சல் எச்சரிக்கை வசதி தேவை. ஒருவேளை சி தொகுப்பி;தகவல் அட்டை முடக்கப்பட்டால் வங்கிக்கு உடனடியாக தகவல் கொடுத்து கைபேசி எண்னை வங்கிக்கணக்கின் இணைப்பிலிருந்து நீக்கக் கோரும் வசதி வேண்டும்.''