ஒரே ஒரு போட்டோ ஷூட் வாய்ப்புகள் குவிய தொடங்கியது தமிழ் நடிகை ரம்யா பாண்டியனுக்கு !

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட அற்புதமான படங்களில் நடித்தும் தனக்கான அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற முடியாமல் தவித்து வந்தார் நடிகை ரம்யா பாண்டியன். இருப்பினும் விடாது முயற்சித்து வந்த அவருக்கு, தற்செயலாக நடத்திய ஒரு போட்டோ ஷூட் திருப்பு முனையாக அமைந்தது அவரே எதிர்பாராத ஒன்று. வீட்டின் மாடியில் சிம்பிளாக நடத்தப்பட்ட அந்த போட்டோ ஷூட் தான் சென்றவாரம் சமூக வலைத்தளம் எங்கும் நிரம்பி வழிந்தது. இடுப்பு மடிப்பு தெரிய சேலையில் ரம்யா பாண்டியன் அமைதியாக அப்புகைப்படத்தில் அமர்ந்திருக்க அலைபாய்ந்ததோ ரசிகர்களின் நெஞ்சம் தான். இவருக்கு கிடைத்த இந்த திடீர் பிரபலம் திரைத்துறையினர் கவனத்தையும் ஈர்க்க, ரம்யா பாண்டியனுக்கு புதிய படவாய்ப்புகளும் குவிய துவங்கி இருக்கிறது. நகைச்சுவை நடிகர் விவேக்கும் இவருக்காக வாய்ப்பு கேட்கிறார்.