ஒரே கதாபாத்திரத்தில் திரும்ப திரும்ப நடிப்பது சரியானதல்ல விஜய் தேவர்கொண்டா !

விஜய் தேவர்கொண்டா டியர் காம்ரேட் என்ற படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ராஷ்மிகா, சுருதி ராமச்சந்திரன், சாருஹாசன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை ரூ.6 கோடி கொடுத்து இயக்குனரும் தயாரிப்பாளருமான கரன்ஜோகர் வாங்கி உள்ளார். இந்தியிலும் விஜய் தேவரகொண்டாவையே கதாநாயகனாக நடிக்க வைக்க விரும்பி அவரை அணுகினர். ரூ.40 கோடி சம்பளம் தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் விஜய் தேவரகொண்டா மறுத்துவிட்டார். இதனால் அவருக்கு பதிலாக இஷான் கட்டாரும் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்தது குறித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, டியர் காம்ரேட் படத்தில் முழு உழைப்பை கொடுத்து நடித்து இருக்கிறேன். அதே கதாபாத்திரத்தில் மீண்டும் 6 மாதம் செலவழித்து நடிக்க விரும்பவில்லை என்றார்.