ஒரே நாளில் டபுள் தமாக்கா – கொண்டாட்டத்தில் G.V.பிரகாஷ் !

தெலுங்கில் வெற்றிபெற்ற '100 சதவீத லவ்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள '100 சதவீத காதல்' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது. கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். எம்.எம்.சந்திரமௌலி இயக்கியுள்ளார். இதேபோல் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – சித்தார்த் நடித்துள்ள ’சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். இவ்விரு படங்களும் ஒரேநாளில் வெளியாகவிருக்கிறது. இதனால் மகிழ்ச்சியில் G.V.பிரகாஷ்.