ஒரே நாளில் மில்லியன் வியூவ்ஸ்! – சர்வதேச பட்டியலில் இடம்பெற்ற வைரல் `ரௌடி பேபி’ !

சர்வதேச இசைப்பட்டியலில் இடம்பிடித்தது தனுஷின் `ரௌடி பேபி' வீடியோ பாடல். பிரபல அமெரிக்க ஊடகமான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் குழுமத்தின் `பில்போர்ட்' பாப் மற்றும் உலகளாவிய இசை சம்பந்தப்பட்ட செய்திகளுக்கு பிரசித்திபெற்றது. சர்வதேச அளவில் ரேடியோ, ஆன்லைன் ஆல்பங்கள், யூடியூப் என வெவ்வேறு ஊடகங்களில் டாப் இடம்பிடித்த பாடல்களின் தரவரிசைப் பட்டியலை வாரந்தோறும் வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் யூடியூபில் வெளிவந்த விடியோ பாடல்கள் தரவரிசையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் சென்ற மாதம் 21-ம் தேதி வெளியான `மாரி 2’ படத்தில் இடம்பெற்ற `ரௌடிபேபி’ பாடல் பில்போர்டின் டாப் ஐந்து பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. கடைசியாக. தனுஷ் – அனிருத் காம்போவின் `Why this kolaveri di?’ மேக்கிங் வீடியோ பில் போர்டில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. பில்போர்டின் இந்த லிஸ்டில் இடம்பெறும் முதல் தமிழ் வீடியோ பாடல் `ரௌடி பேபி’ என்பது குறிப்பிடத்தக்கது. பாடகி தீ உடன் தனுஷ் எழுதிப் பாடிய இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இப்பாடலின் வீடியோ சென்ற வாரம் யூடியூபில் வெளியானது. வெளியான ஒரே நாளில் 7 மில்லியன் வியூவ்ஸ் பெற்ற இப்பாடல் 8 கோடி வியூவ்ஸ் தாண்டி யூடியூபைக் கலக்கி வருகிறது.