ஒரே நாளில் வேறு ஒரு அணியை உருவாக்குகிறார்கள் – நாசர் பேட்டி !

எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வேறு இடம் அறிவிப்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடவும், வாக்கு சேகரிக்கவும் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பாண்டவர் அணியில் அனைத்துக்கட்சியை சேர்ந்த நடிகர்களும் உள்ளனர், எங்களுக்கு எந்த அரசியல் சார்பும் கிடையாது. எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த உரிமை உள்ளது. எங்களுக்கு தேர்தல் நடத்த உரிமை உள்ளது. எல்லா பக்கத்தில் இருந்தும் தடை வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. கடந்தமுறை நாங்கள் கேள்வி தான் கேட்டோம். ஆனால் தேர்தலை சந்திக்க வைத்தனர். ஒரே நாளில் வேறு ஒரு அணியை உருவாக்குகிறார்கள் அதற்கான காரணம் தெரியவில்லை இவ்வாறு அவர் கூறினார்.