ஒரே நிறுவனத்திற்கு மூன்று படங்களில் ஒப்பந்தமாகோயிருக்கும் ஜெயம் ரவி- பின்னணியில் இருக்கும் வியாபார யுக்தி!

ஒரே நிறுவனத்துக்கு அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி ஒப்பந்தமாகியிருப்பது கோடம்பாக்கத்தில் பரபரப்பான செய்தியாகியிருக்கும் நிலையில் அதன் பின்னணியில் ஒரு பெரிய வியாபார யுக்தி இருக்கும் விபரம் வெளியாகியிருகிறது. இரு தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனதை விட, பல நல்ல திரைப்படங்களை தயாரிக்க ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த மாதிரியான தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம். அவர்களின் நீண்ட பயணத்தில் ஒரு அங்கமாக இருக்க என்னை தேர்ந்தெடுத்ததற்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இப்படி மூன்று படங்களுக்கு ஜெயம் ரவி தொடர்ந்து கால்ஷீட் கொடுக்கக்காரணம்  இப்படங்களைத் தயாரிக்கும் ஸ்கீரின்சீன் நிறுவனத்தினர் கட்டுமானத் தொழிலில் புகழ்பெற்றவர்கள். அவர்கள் கைவசம் சென்னை போயஸ் கார்டனில் சுமார் 25 கோடி மதிப்பில் ஒரு வீடு இருக்கிறதாம். அந்த வீட்டை ஜெயம்ரவிக்குக் கொடுத்துவிடுவதாக அவர்கள் உறுதி கொடுத்திருக்கின்றனராம். அதற்குக் கைமாறாகவே மூன்று படங்களில் நடிக்க ஜெயம்ரவி ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.