ஒரே நேரத்தில் இரு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் லாஸ்லியா !

தமிழில் உருவாக உள்ள இரண்டு படங்களில் லாஸ்லியா ஹீரோயினியாக ஒப்பந்தமாகியுள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதை வென்றவர் லாஸ்லியா. இலங்கை சேர்ந்த ஈழத்து பெண்ணான இவர் படங்களில் நாயகியாக நடிப்பதே தன்னுடைய ஆசை, அதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறினார். அவரின் ஆசைப்படி தற்போது ஒன்னு இல்ல இரண்டு படங்களில் கமிட்டாகியுள்ளார் லாஸ்லியா. ஆம் பிரபல நடிகரான ஆரி நடிக்கும் படம் ஒன்றில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். படத்தின் பூஜை முடிந்து அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஹர்பஜன் சிங் நடிக்கும் ப்ரண்ட்ஸ் ஷிப் படத்திலும் லாஸ்லியா தான் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளாராம்.