ஒரே மாதத்தில் 2 படத்தில் நடித்த ஜி வி பிரகாஷ் மகிழ்ச்சி

இசையமைப்பாளராக இருந்து ஹீரோவான ஜி வி பிரகாஷ்,  நமது தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிவருகிறார். இந்நிலையில்,  வருகிற நவம்பர் 10 தேதியில் இவரது படமான “கடவுள் இருக்கான் குமாரு” வெளியாகவுள்ளது. இப்படத்தின்  குழு  தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். தற்போது 'யு' சான்றிதழ் கிடைக்கவே,  நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். மேலும் இவரது இன்னொரு படமான “ப்ருஸ் லீ” படமும் இதே மாதத்தில் வருகிற 25ம் தேதி  வெளிவரவுள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் 2  படத்தை  ரசிகர்களுக்கு தருகிறார் ஜி வி பிரகாஷ்.