ஒஸ்தி பட நடிகை ரிச்சா கங்கோபாத்யாய தனது அமெரிக்க காதலரை மணந்தார் !

2010-ல் தெலுங்கில் வெளிவந்த லீடர் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரிச்சா காண்கிபாத்யாய, தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கமென்ன படத்தின் மூலம் அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்புவுடன் ஒஸ்தி படத்திலும் நடித்தார். அதன் பிறகு சில தெலுகு படங்களில் நடித்துவிட்டு அமெரிக்காவிற்கு படிப்பதற்காக பறந்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படிக்கும்பொழுது அங்கே ஜோ லாங்கேல்லா என்பவரை காதலித்து வந்தார். அண்மையில் தந்து பெற்றோர் சம்மதத்துடன் அமெரிக்காவில் கிறித்துவ மற்றும் பெங்காலி முறைப்படி திருமணம் முடிந்தது. நல்ல நல்ல சினிமா வாய்ப்புகள் வந்தபோதிலும் சினிமாவை விட்டு திடீரென விலகியது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை உண்டாக்கியது, தமிழில் இரண்டு படங்கள் நடித்திருந்தபோதிலும் அப்படங்களில் அவரது நடிப்பும், கவர்ச்சியும் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருந்தது.