ஓட்டு இல்லையென்று திருப்பி அனுப்பப்பட்ட கொல்லங்குடி கருப்பாயி !

ஆண் பாவம் படத்தில் பாண்டியராஜனால் பெரிய திரையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் மூத்த நடிகையும், நாட்டுப்புற பாடகியுமான கொல்லங்குடி கருப்பாயி. அந்த படத்தில் பாண்டியராஜனின் பாட்டியாக நடித்திருப்பார். 1993ம் ஆண்டு கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி கடந்த தேர்தலின்போது நடிகர் சங்க உறுப்பினர் இல்லை. அவர் கஷ்டப்படுவது குறித்து அறிந்த விஷால் தான் அவருக்கு உறுப்பினர் அட்டை வாங்கிக் கொடுத்தார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க சிவகங்கையில் இருந்து சென்னை வந்தார். ஆனால் அவருக்கு வாக்கு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தேர்தல் நடக்கிறது என்று இரு கோஷ்டிகளும் கடிதம் அனுப்பினார்கள். இதையடுத்து ஓட்டு போடலாம் என்று ஓடோடி வந்தேன். ஆனால் உனக்கு ஓட்டு இல்லை என்று கூறிவிட்டனர்.