ஓவியங்கள் பாடும் இளையராஜா பாடல்

சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் சினிமா சம்பந்தப்பட்ட ஒரு கண்காட்சியை வருகிற வெள்ளிக்கிழமை அன்று நடத்துகிறார் எஸ்.பி.ஜனநாதன். இந்த கண்காட்சியில் சினிமா குறித்த பல அறிய தகவல்கள் இடம்பெறப்போகிறதாம்.முக்கியமாக  இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் தேர்வு செய்து,  அந்தந்த பாடல்களுக்கேற்ற படங்களை சில ஓவியர்கள் வரைந்துள்ளார்களாம்.

அவை அனைத்துமே இந்த கண்காட்சியில் இடம்பெற இருக்கிறது. மேலும், அந்த ஓவியங்களை பார்த்தாலே எந்த அது பாடலுக்குரியது என்பதை சொல்லி விட முடியுமாம். அந்த அளவுக்கு தத்ரூபமாக வரைந்துள்ளார்களாம்.