ஓவியாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆரவ் !

ஓவியா இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓவியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவ் கலந்து கொண்டுள்ளார். மேலும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். ஆரவும், ஓவியாவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் ஓவியாவோ காதலிக்க நேரமில்லை என்கிறார்.