ஓ.பி.எஸ்க்கு ஆதரவாக கமல்

ஓ.பன்னீர்செல்வம் திறமையானவர்; அவர் முதல்வராக ஆட்சி புரிய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.நான் பன்னீர்செல்வத்தின் நண்பனும் அல்ல. எதிரியும் அல்ல.அவர் ஜல்லிக்கட்டு விஷயத்தில் திறமையாக வெற்றி கண்டுள்ளார். அவர் மீண்டும் முதல்வராக ஆட்சி வர வேண்டும். ஜனநாயக ரீதியாக எனது விருப்பமும் இதுதான்.

சசிகலாவின் தகுதி பற்றி எனக்கு தெரியாது. அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும்
செய்தது கிடையாது. ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் இருந்தார் என்பதற்காக​ அவர் முதலமைச்சராக​ முடியாது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.