கஜா புயல் நிவாரண உதவி- ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி பாராட்டு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண உதவிகளை செய்தனர். ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றம் சார்பிலும் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முழுக்க இருக்கும் மன்ற உறுப்பினர்கள் அனுப்பிய நிவாரண பொருட்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இதை டெல்டா மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்கள். இதில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களையும், நிர்வாகிகளையும் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்தார். நிவாரண உதவிகளை சிறப்பான முறையில் வழங்கியதற்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.