கஜினிகாந்த் இயக்குனரின் படத்தில் அரவிந்தசாமி !

ஹரஹர மகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து சந்தோஷ்
பி.ஜெயக்குமார் டைரக்டு செய்ய இருக்கும் புதிய படத்தில், அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தைப்பற்றி அவர் கூறுகையில் அரவிந்தசாமி ஒரு படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் என்றால், அந்த படம் கவனிக்கப்படும் படமாகத்தான் இருக்கும். துப்பறியும் திகில் சம்பந்தப்பட்ட இந்த கதையில், அரவிந்தசாமி புலனாய்வு துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். வி.மதியழகன் தயாரிக்கிறார்.  டி.இமான் இசையமைக்கிறார். கதாநாயகி இன்னும் யாரென்பது முடிவாகவில்லை, தொழில்நுட்ப ரீதியிலும், செலவிலும் பிரமாண்டமான படைப்பாக இந்த படம் உருவாகிறது.