கஜோலுக்கு மெழுகு சிலையா?

மேடம் டுசாட் என்ற பிரபல அருங்காட்சி லண்டனில் உள்ளது.இதன் கிளைகள் பல்வேறு நாடுகளில் உள்ளது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் மெழுகு சிலையை அருங்காட்சியமாக வைத்துள்ளது.இந்நிலையில்  சிங்கப்பூரில் மேடம் டுசாட்  அருங்காட்சியத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கஜோலுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக இந்த குழுயை சேர்ந்தவர்கள் மும்பை வந்து கஜோலின் முகத்தோற்றம், கண், முடி, ஆகியவற்றை அளந்து சென்றனர். இது பற்றி அவர் கூறுகையில் “என் சிலையை உருவாக்க தேவையான அளவீடுகளை சுமார் 4 மணி நேரம் எடுத்து சென்றனர்.இதன் வேலைகள் முடிந்து சிங்கப்பூரில் சிலை வைக்கப்படும் நாளை எண்ணி காத்திருப்பதாகவும், சிலையை காண ஆவலாக உள்ளதாகவும்  கூறியுள்ளார்.