கஞ்சா உடம்புக்கு நல்லது என சொல்லி அதிரவைக்கிறார் – விஜய் பட நாயகி !

தமிழ் சினிமா ஹோம்லி ஹீரோயின்களின் வரிசையில் 90-களில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருந்தவர் கௌசல்யா. தற்போது பெங்களூரில் இருக்கும் அவரிடம் பேசியபோது அவர் கூறியது, விஜய்யுடன் நடித்தது மறக்க முடியாதது. நான் காலம் கடந்து கிளாமராக நடிக்க முடிவே செய்தேன் அது பலனளிக்கவில்லை கஞ்சா உடம்புக்கு கெடுதல்னு பரவலா சொல்லப்படுது. ஆனா அது உண்மை இல்லை. கஞ்சா எடுத்துக்கிட்டா கேன்சர் வராது. கஞ்சா பயன்படுத்துறதை சட்டபூர்வமா அனுமதிக்கணும்னு குரல் கொடுக்கப்போறேன். இந்தக் கருத்துகளையெல்லாம் வலியுறுத்தும் விதமா ஓர் ஆன்மீக படத்தை நானே தயாரிக்கப்போறேன். தமிழ், தெலுங்கு மொழிகள்ல பைலிங்குவலா உருவாகப்போற இந்தப் படம், கஞ்சாவோட நன்மைகள் என்னென்னங்கிறதைப் பத்தி பேசும். எப்படி ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ்னு ஒரு ஜானர் இருக்கோ அப்படி ஆன்மிகம் அப்படிங்கிற ஜானர்ல இந்தப் படத்தை உருவாக்கப்போறோம். முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே இந்தப் படம் இருக்கும். இதுல ஹூமா குரேஷி அல்லது லெட்சுமிராயை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் போய்க்கிட்டிருக்கு. நானும் இதுல ஒரு முக்கியமான ரோல் பண்றேன். கூடிய சீக்கிரமே முறையான அறிவிப்புகள் வெளிவரும்