கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை விக்ரம் முடித்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இப்படம் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் கசிந்துள்ளது. மேலும் ஜூலை 3-ம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.