கடாரம் கொண்டான் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு !

கமலின் தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் செல்வா. இவரது அடுத்த படமான கமலின் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தை இயக்கிவருகிறார். படத்தில் விக்ரம் உளவு துறை அதிகாரியாக வருகிறார். அக்‌ஷராஹாசன் ஒரு பிரச்சினையில் சிக்குவதும், அதில் இருந்து அவரை விக்ரம் எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் கதை. அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. ஹாலிவுட் படம் போன்று இதனை எடுத்து இருப்பதாகவும், விக்ரம் ஸ்டைலாக நடித்துள்ளார் என்றும் படத்தை பார்த்த கமல்ஹாசன் பாரட்டி உள்ளார். இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். யூ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் தணிக்கை குழுவினர் யூஏ சான்றிதழ் அளித்துள்ளனர். அதிக வன்முறை இருப்பதால் யூ சான்றிதழ் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. கடாரம் கொண்டான் படத்தை அடுத்த வாரம் திரைக்கு கொண்டு வருகிறார்கள்.