‘கடாரம் கொண்டான்’ படத்தில் ஜிப்ரான் இசையில் விக்ரம் பாடல்!

ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இதுகுறித்து ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் சாரை ஒரு பாடலை பாட வைத்ததில் பெருமை கொள்கிறேன். முழு உற்சாகத்துடன் அவர் அந்த பாடலை சிறப்பாக பாடிக் கொடுத்திருக்கிறார். காலையில் இந்த பாடலை கேட்கும் போது நாள் முழுக்க அது உற்சாகத்தை கொடுக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.